ஸ்டேட்டஸ் காதல்
ஸ்டேட்டஸ் காதல்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தொடர்பில்லா தொடர்பாகத்
தொடர்ந்துவரும் விந்தை !
திறவாதக் கதவுகளுள்
புகுந்துவிடும் விந்தை !
மறைவான எண்ணங்களை
மந்தையிலே கூட்டும் !
திரைமறைவின் சிந்தையெலாம்
தெருவினிலே காட்டும் !
இனம்தாண்டி மொழிதாண்டி
எவ்விடமும் உலவும் /
இதயத்தைத் திறந்து வைத்தால்
உன்னிடமும் நெருங்கும் !
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!!
-யாதுமறியான்.