எலி மூஞ்சி ஆனேனே

ஏலக்காய் என்ற
பொருள் தரும்
இந்திப் பெயரை
பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென்று
கருவிலேயே பெற்றோர்
எனக்கு வைத்த
பெயர் எலிகா.

இப்போது பாருங்கள்
என் முகத்தை
எலி மூஞ்சியுடன்
வளர்ந்து விட்டேன்.

ஏலக்காய் என்று
பெயர் சூட்டினாலும்
தமிழருக்கு அப்பெயர்
கேவலமான பெயராகும்.

ஏன் இந்த
இந்திப் பெயர்
மோகம் தமிழருக்கு?
இனியும் வேண்டுமா
எலிகா எனக்கு?

வழக்கறிஞர் மாமா
எலிகாவைத் தூக்கிவிட்டு
தமிழ்ப் பெயரொன்றைச்
சட்டப்படிப்படி சூட்டுவதாய்க்
கூறினார் பாசத்துடன்.

அப்பெயர் என்னவென்று
அரசிதழ் வெளியானதும்
அறிவீர் எனதருமைத்
தமிழ் மக்களே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Elika = Cardamom. Indian origin Feminine name.

எழுதியவர் : மலர் (16-Nov-22, 12:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே