ஏன் ஏன்
ஏன்..ஏன்...
சிறுகதை
ஆக்கம்:
அறந்தை ரவிராஜன்.
***** ****** **********
ஐயா... இனிப்பு பணியாரம்...
குழி பணியாரம் வேணுங்களாயா..
காலையில் செய்தித்தாள் படித்துக்
கொண்டிருந்த நான் நிமிர்ந்து
பார்த்தவனாய் வேண்டாம்..
என சொல்ல எண்ணியவன் அந்த
அம்மாவுடைய முதுமை தள்ளாத
தோற்றத்தையும் பார்த்து ...
இந்தாம்மா இங்கே வா ...எவ்வளவு..
இருபது ரூபாய்க்கு கொடு..
என்றேன்.என் பக்கத்தில் நான் வளர்க்கும் "ரிஷி"வாலாட்டியபடி
நின்றது.
அந்தம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி.
முதல் யாவாரம்..இன்னும் நாளஞ்சு
தெருவுக்கு போகனும்...ம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாரம் நடக்கும்மா..?
மிஞ்சி போனா இருநூறு ரூபா..
வாரத்தில சனி ஞாயிறு இரண்டு
நாள் தான் வருவேன்..
மனதில் லேசா நெருடியது..ஒரு
இருநூறு ரூபாய்க்கு...இந்த தள்ளாத
வயதில்..
உனக்கு புள்ளைங்க..
இருக்கான்யா....
அவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு சின்ன குழந்தைங்க..
எம்மவன் குடிச்சே சீரழிஞ்சிட்டான்.
சம்பளத்தைப் பூரா குடிச்சிட்டு
ராத்திரியானா சாப்பாடு போடுனு
சண்டை..அடி உதை..
மருமக தங்கமானவ.
படிச்ச பொண்ணு.பாவமா இருக்கு.
அவ தான் பணியாரம் சுட்டு குடுப்பா.
சொல்லச் சொல்ல மனதை
என்னவோ செய்தது.
இந்த வயசுலயும் பிச்சை எடுக்காமல்
உழைக்க நினைக்கும் பாட்டி மனதில் உயர்ந்து உயர்ந்து நின்றாள்.
ஒன்னாம் தேதியான ஓய்வூதியம் வரும் என நம்பிக்கையோடு
காத்திருக்கும் நான்....
ஊதியத்திற்காக ஓய்வே இல்லாமல்
உழைக்கும் அந்த பாட்டி...
இரு வேறு உலகம் இதுவென்றால்
ஏழையை இறைவன் ஏன் படைத்தான். வரிகள் காதில் ரீங்காரமிட்டது...
அன்றாடம் நாம் காணும்
இந்த மாதிரியான உழைக்கும் மக்களுக்கு
நாம் விரும்புகிறோமோ இல்லையோ அந்தப்
பொருளை வாங்குவதால் ஒரு சிறு உதவி.
முதியோர் இல்லம் செல்ல நேரம் ஏது?
சிலிர்த்தவனாய்....பாட்டி
நாளைக்கு வரும்போது எனக்கு ஐம்பது ரூயாய்க்கு கொண்டு வாங்க..