அதிகாரி இங்க வாடா

அதிகாரி இங்க வாடா
@@@@@@@@@@
என்னம்மா அதிகாரியைப் போயி‌ மரியாதை இல்லாம்மா "வாடா"னு கூப்படற? அவரு காவல் அதிகாரிகிட்ட புகார் கொடுத்தா உன்னைக் கம்பி எண்ண வச்சிருவாரு.
@@@@@@@
ஏன் எதுக்கு? எனக்கும் சட்டம் தெரியும். நான் அப்படித்தான் அதிகாரியை "வாடா"னு கூப்புடுவேன். அதிகாரியே பேசாம இருக்கிற போது உங்களுக்கு என்ன வந்தது?
@@@@#
அம்மா, பாத்து கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்க.
@@@@@@
ஐயா, வட இந்தியாவில் சிலர் 'அதிகாரி'ங்கிற பேரோட இருக்கிறாங்க. அந்த அதிகாரிகளோட நண்பர்கள் அவர்களை 'வாடா போடா"னு தானே கூப்புடுவாங்க.
@@#####
அம்மா, நீ சொல்லறது வட இந்தியாவில். நாம் தமிழ்நாட்டில் வாழறோம். இங்க அதிகாரின்னா அரசு அதிகாரிகளைத் தான். உங்க உறவினர் அரசு அதிகாரியாக இருந்தாக் கூட "அதிகாரி இங்க வாடா"னு கூப்பிட்டு அவரோட பதவியை அவமதிக்கக் கூடாது. உங்களுக்கு அவர் என்ன உறவு முறையோ அதன்படியோ அவர் பேரைச் சொல்லியோ அவரைக் கூப்படறதுதான் முறை.

எழுதியவர் : மலர் (12-Nov-22, 7:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 75

மேலே