முகவரி கேட்டேன்
முகவரி
*********
சிறுகதை
ஆக்கம்:
அறந்தை ரவிராஜன்
------ --------------------------------
இந்தத் தெருவிலதான் வசிப்பதாக
ஒரு தடவை சார் சொன்ன
ஞாபகம்....ம்.. விசாரிச்சு பார்ப்போம்.
யுனிவர்சிட்டில புரபசர். தெரியாமலா
இருப்பாங்க...
ஐயா... கொஞ்சம் நில்லுங்க...
இந்தத் தெருவில சாரங்கன்னு
ஒரு புரபசர்.போனமாதம்தான்
ரிடையர்டு..வீடு தெரியுங்களா..
கேட்ட என்னை மேலும் கீழும்
பார்த்தவாறே சார்....இங்கே
நிறையப் பேர் ரிடையர்டு ஆகி
இருக்காங்க...
அவர் என்ன கேஸ்டுனு சொன்னா...
இழுத்தார்....
சாரிங்க அதெல்லாம்
தெரியாது....அவர் நிறைய புத்தகம்
எல்லாம் எழுதியிருக்கார்..
சமூக சேவகர்..அதான் தெரியும்.
ஊகூம் தெரியல...
அந்த ஆள் புரபசரைத் தெரிந்ததாக
சொல்லவில்லை..
மீண்டும் யோசிச்சவாறே...ம்
என்ன சாதின்னு தெரியலைங்கிறீங்க..எப்படிங்க...
கண்டுபிடிக்கிறது...
போன் நம்பரையும் குறித்து வைக்காம முகவரி கேட்கும்
என்னை நானே நொந்து கொண்டேன்
சரிங்க..நான் பார்த்துக்கிறேன்
அந்த நேரத்தில் நான் முகவரி கேட்ட
நபரை நோக்கி வந்த அவரது நண்பர்....
யாரு வேணும்மாப்பா
யாரோ சாரங்கன்னாம்...வாத்தியாராம்..
யோசிச்சவாறே
வாத்தியாரான்லாம் தெரியாது...
அதான்டா அந்த **********சாதிக்கார
ஆளு கால் கொஞ்சம் சாச்சு நடப்பாரே..அவர்தான் சாரங்ன்னு
இங்கே இருக்கிறதா நினைக்கிறேன்
சுதாரித்து கொண்டேன்..அவர்தான்.
எந்த சைடு போகனும்..
இப்படி போனீங்கனா மூனாவது
கட்டிங்.. நாலாவது வீடு.
தம்பி இனிமேல் அட்ரஸ் கேட்கிறதா
இருந்தா சாதியை தெரிஞ்சு வச்சுகிட்டு கேளுங்க..ஏன்னா
ஒவ்வொரு ஏரியாவுலையும் ஒவ்வொரு சாதி பாருங்க...
அதான்..
.
குணத்தைச் சொல்லி படிப்பைச்
சொல்லி முகவரி கேட்டா பதில்
தெரியலை..
உடல் ஊனம், மனம் ஊனமான
சாதியைச் சொல்லி முகவரியை பெறும் இந்த சாக்கடைச் சமுதாயம்
மாறுவதெப்போது...
மனதிற்குள் அழுதவாறு அவர்கள் காட்டிய
திசையில் நடக்கலானேன்.