கண்ணீரில் நீராடிவிட்டு செல் 555

***கண்ணீரில் நீராடிவிட்டு செல் 555 ***


கண்மணியே...


வாழ்வில் கனவில் நான்
உறங்கிய அந்நாட்களைவிட...

உறங்காத
நாட்களே அதிகம்...

இன்று எல்லாம் கடந்து விழிகள்
நனையும் நாட்களே அதிகம்...

என் வாழ்வில்
நீ வந்து சென்றதால்...

கண்ணீரி
ன் வலிகளை
ணர்ந்தவன் நான்...

மற்றவருக்கு நான்
கொடுத்ததில்லை...

நான் பழகி
கொண்டதால் என்னவோ
...

நீயும் கண்ணீரையே
கொடுத்து செல்கிறாய்...

படைத்தவனே உன்னை
எனக்கு காட்டி கொடுத்
தான்...

சேர்த்து வைக்க முடியாதவன்
எதற்காக சந்திக்க வைத்தான்...

எதையும் தாங்கி
கொள்ளும்
இதயம் என்று...

உன்னை கண்களுக்கு காட்டி
கண்ணீரை வரவைத்துவிட்டான்...

நீ பிரிவு
கேட்டபோது சரி என்றேன்...

அவ்வளவுதானா என்றாய்
புருவம் உயர்த்தி...

நீ முடிவெடுத்துவிட்டு
என்னிடம் கேட்கிறாய்...

உன்னை கட்டாயப்படுத்த
நான் விரும்பவில்லை...

ஈரெழுத்து ஒரு
வார்த்தைதான் *சரி *...

உணர்ந்தாள் மீண்டு
ம்
கரம் கோர்த்துவிடு...

இல்லையேல் என் கண்ணீரில்
நீராடிவிட்டு செல் இறுதியாக.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (21-Nov-22, 9:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 263

மேலே