மறைத்து வைத்து

மறைத்து வைத்து..!

எதையோ
மடியில் மறைத்து
வைத்து

கூட்டம் கூட்டமாய்
ஓடி கொண்டிருக்கும்
மேகங்கள்

அதனை
மறித்து நின்ற
மலைகள்

விளையாட்டாய்
மேகங்களின்
மடியை அவிழ்த்து
விட

மறைத்து வைத்தது
எல்லாமே
கொட்டி போனது
பெரு மழையாய்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Nov-22, 10:52 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : maraithu vaithu
பார்வை : 195

மேலே