மாலை நேரம்
ஆகா தென்றலே!
என்னுள் புதைந்த நினைவுகளை புதுப்பிக்கிறாய்.
எத்தனை எத்தனை நினைவுகள்.
அரசமரத்தினில் பறவைகளின் கீச்சொலியில்,
மொட்டை மாடியின் மாலை நேர கதகதப்பில்,
மெல்லிசை பாடல்களில் ஏன் இதயம் ஏங்குகிறது?
மாசறியா காற்றில் இதயம் இன்னும்
சில வருடங்களை கூட்டி கொள்கிறது.
பருவத்தை, வயதை குறைத்து கொள்கிறது.
ஆயிரம் வேலைகள், திட்டுகள்,
எதிர்கால எண்ணங்கள் உலுக்கினாலும்
மாலையே நீ பூமாலையாய் வருடுகிறாய்.
நீ பட்டாய் பல காயம்
அதெல்லாம் நான் கொடுத்த பாடம்
என உரைக்கும் போது
எதிர்காலம் நட்சத்திரமாக இருந்தாலும்
தொட உவகை கொள்கிறேன்.