யார்

விடை தெரியா கேள்விகள் ஆயிரம்
சதை குவியல்களில் உணர்வுகளை தொகுத்தது யார்?
மாளிகை அடிமட்டத்தில் இருந்து
கட்டி எழுப்புவது கண்டோம்.
ஆனால் உணர்வுகள் ஒவ்வொன்றுமே
சதை தொகுப்பில் உயிர் கொள்ளும் விந்தை!
அரவணைப்பை மட்டும் தேடும்
குழந்தை பருவம்
அடம் பிடிக்கும் வளர் பருவம்
கட்டுக்கடங்காத பதின்ம பருவம்
மதி மயக்கும் பாலின கவர்ச்சி பருவம்
எதிர்காலம் தேடி தவிக்கும் பருவம்
உடல்வலிமை நம்மை மீறும் பருவம்
ஆன்மா நம்மை விட்டு வெளியேறாதா?
என நம்மையே வாய் விட்டு
கேட்க வைக்கும் பருவம்
எத்தனை எத்தனை!
குத்தினால் கிழிந்து போகும்
சதையும், தோலும் கொண்ட உருவில்
உலகத்தையே மாற்றும் வெறியையும்
சகலத்தையும் அன்பால் இணைக்கும் நெஞ்சத்தையும்
நம்முள் திணித்தது யார்?

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:33 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : yaar
பார்வை : 165

மேலே