வாழ்ந்து பார்
பூத்த பூவை விலை கொடுத்து
வாங்கி, ரசித்து,
வாட்டம் அறிந்தபின்
தூக்கி எறியும் ஏவுகணை வேக
நொடி நேர மனிதர்களுக்கு,
விதை நட்டு தினம் ரசித்து
நீர் ஊற்றி
துளிர் இலை மீதொரு பனித்துளி மிதக்க
மொட்டு கண்டு
மலர் விரியும்
பொன் நேரம் மறைபொருள் ஆகிறது.
தூக்கி எறியும் முன்
வாழ்ந்து பார்.