கண்ணில் காணா கற்பனையே

உருவாகும் போதே நேசிப்பை தரும்
தாயிடம் கூட சிறிது சுயம் உண்டு.
காதில் உரைக்கும் நல்வார்த்தை
கேட்டு
மட்டுமே நேசிக்கும்
அன்பை வியக்கிறேன்.
திருமண விதை விதைக்கும் போது
அறுவடையாய் நீ கிடைக்க
நல்வார்த்தை உரமாகிறது.
திரையில் தோன்றும் கற்பனை தானே
என நினைக்கும் போது
உன் குரல்
செவி வழி அமுதென இனிக்கிறது.
எது உன்னை ஈர்த்தது?
காந்தமோ, எதிர்புலமோ
என்னவோ!
சொல்லில் விளங்காத,
வார்த்தை இல்லாத கண்டறியா ஆழம்.
சிந்தித்தேன்.
இந்த மாற்றம் எதுவிலும் நிகழும்
இனம் புரியா ஈர்ப்பு.
கடல் கலக்கும் மழை துளியாய்
நீ சேர தவிக்கிறேன் நான்.
கற்பனை நிசமாக சேர்வாயா?

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:56 pm)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 402

மேலே