மனமே உறங்கு
நேற்று நடந்தது நினைவில் இல்லை
நாளை நடப்பதோ கையில் இல்லை
கடல் அலை போல்
நில்லாமல் அலைகிறாய்.
உலககென்னும் கரையை தொட்டும்
மனம் திருப்தி கொள்ள மறுக்கிறது.
ஆயிரம் ஆன்மாக்கள்
வாழ்ந்த, வாழ்கின்ற
நிலத்தில் கொடுத்தானே இறைவன்.
உன் வலியில் தாங்க உறவுகள் கொடுத்தானே.
அதில் மனம் அடக்கம் கொள்ளவில்லை.
மகிழ்வு கொள்.
உலகமே ஒரு நொடியில்
நம் மடியில் விழும்..
தேடிய பொருள் கிடைத்தபின்
வாழ்வு வெறுத்துவிடும்.
தேடுதலை நிறுத்தாதே.
கரை கண்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்திடு.