பெண்கள்
வீட்டில் சுழலும் பம்பரமாய்
தான் இன்றி தவிக்க வைக்கும்
தாயாய்
உடன் தாங்கும் தங்கையாய்
தூக்கி சுமக்கும் மகளாய்
இரகசியம் பகிரும் தோழியாய்
குணம் கொண்டு ஏற்கும்
உடன்பிறவா சகோதரியாய்
சேவை செய்யும் ஆன்மாவாய்
விண்வெளிக்கே வெளிச்சம் காட்டும்
தைரியசாலியாய்
நீ ஏற்கும் பாத்திரத்தை
தன்னிறவாய் நிறைக்கும் தேவதையாய்
நீர் இன்றி அமையாது உலகு போலவே
நன் பெண்மணி இல்லாமல்
நன் மக்களும் இங்கில்லை.
வாழ்க வாழ்கவே