அப்பா

பகிரியில் பதறும் பலரை கண்டேன்.
எனை தாங்கிய உனை
தாங்கும்
வரம் அருள மறுத்தாயே
எனும் பாசந்தனை உணர்ந்தேன்.
நீ பிரியும் நேரம்
அரண் உடைய கண்டேன்.
அதுவரை வெளிச்சம் மட்டுமே
கண்ட கண்கள்
இருளை கண்டு அஞ்சுகிறது.
மனம் பின் செல்கிறது.
அன்றொரு நாள் தூரத்தில் தெரியும்
தேரினை காட்ட தோளின் மேல்
தூக்கும் போது
நானறியவில்லை
வாழும் தெய்வம் நீ என்று.
நிமிர்ந்து நிற்கும் மலையாய்
உன்னை கண்டதால்
உணர்ந்து சேரும் தெய்வமென நினைக்க மறந்தேன்.
தோழனை , காவலனை கண்ட உன்னில்
இறைவனை காண மறுத்தேன்.
விழித்தேன்
நண்பர்களின் ஏக்கம் கண்டு.
உணர்ந்தேன்
எனை சுமந்த அப்பா
அருகில் இருக்க கண்டேன்.
தத்தி நடந்த என்னை தாங்கிய உன்னை
தளரும் நடை தாங்க என் தோள் தருகிறேன்.
காலம் மட்டும் நெஞ்சில் இடம் உரித்தாக்குறேன்.

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:53 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : appa
பார்வை : 194

மேலே