கலவி
உனது குருதியில் என் குருதி கலக்க
நமதிரு உருவாய்
ஓர் உயிர் பிறக்க
என்னில் பாதியாய் அல்ல
உன்னில் முழுதாய் அவன்/அவள்
இருக்க இறை பணிகிறேன்.
அழகும், அறிவும்
இரு துருவமாய் இங்கிருக்க
இயற்கை உன்னில்
இருதுருவத்தை கலக்க
நமது உயிர் உன்னை நகலெடுக்க
கையில் ஏந்துவேன்.