கிராமம்

தாயின்மடி சுகத்தை அளிக்க
நான் இருக்க
தொலைபேசியில் தொலைவது ஏனோ?
நேரம் கரைய
ஆற்றல் அதிகரிக்கும் விந்தை
மண்ணின் சகவாசமே.
வேர்வை பூமி தொட
சுட்டெரிக்கும் சூரியனும் ஓய்வு கேட்பான்.
செருப்பை வெறுத்து
வெறுங்காலில் கபடி ஆட
கிட்டிபுள் பறக்க
கோலி குண்டு அடிக்க
பட்டம் விட
கப்பல் விட மழைநீர் ஓட்டம்
குருவி வேட்டை கொண்டு
காட்டு சமையல் சுவைக்க
கவண் கொண்டு அடிக்கும்
வேகம் கண்டு ஒலிம்பிக் கூட
கம்பளம் விரிக்கும்.
இரவுநேர தாயம்
ஆடுவதோ நான்கு பேர்
அரங்கமோ நாற்பது பேர்.
ஆடுபுலி ஆட்டம்
வெட்டு குத்து குற்றமில்லை
காவலன் தொல்லை இல்லை.
கத்தியும் இல்லை இரத்தமும் இல்லை
ஆனால் போர்க்களம் உண்டு.
அமாவாசையில் கூட நிலா வெளிவரும்.
நிற்கும் இடம் நகரா கண்ணாமூச்சி.
தென்னைமட்டை கிரிக்கெட்
பேப்பர் பந்து கூட
சீறும் சிறுத்தை ஆகும்.
அறிவாய் கல்வி ஆறில்
அதன் முன்னே
புறழ்வாய் மண்ணில்.
காயமும் கரைந்து போகும் மாயம்
உன்னை அள்ளி பூசுவதாலோ?
மண்ணும் இங்கே மருந்து தான்.
காத்தும் ,நீரும், சத்தமும்
சுத்தம் காண நித்தம் தேடி வா.
தாயின்மாடி தூக்கம்
அரசமரத்தடியில் காண வாராயோ?
கடவுளின் சொர்க்கம் கிராமம்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:39 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : giramam
பார்வை : 54

மேலே