நீண்டதொரு பிரிவிற்குப்பின்னால்
நீ என்னவோ என்னை மறந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தாய்
நானுமுன்னை விலகியிருப்பதாகவே எண்ணியிருந்தேன்
ஆனால்
எனக்கும் உனக்கும்
தெரிந்தவர்களுக்கு மத்தியில்
இன்னும் நாம்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்
பூக்காரன் கவிதைகள்-பைராகி