காப்பாற்றிக்கொள்ளுங்கள்

புராணகாலத்தில் ப்ரபோ...பிராணநாதா
அடுத்தடுத்து காலங்களில்
அத்தான்...மாமா...
அன்பே...ஆருயிரே...
அவர்...இவர்...
ஏய்....என்ன....
ரவுடி பேபி.....டோரா புஜ்ஜி...
எரும மாடு.... நாயே....
ஆண்களே...
விழித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மரியாதை
தேய்வதை புரிந்துகொள்ளுங்கள்.
பிரச்சனை
பெண்களிடமா?...இல்லை உங்களிடமே?
உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள்.
மாறிக்கொள்ளுங்கள்.
மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Nov-22, 7:57 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 65

மேலே