காதல் வாழும்

முத்த தேடலே என் மொத்த தேடலே
சப்தம் இன்றியே ஒரு ஊடல் காதலே.
கணவன் மனைவியாய்
இருந்த போதிலும்
காதல் தானே நம் முகவரி
பாசம் தானே அதில் முதல் வரி
காதல் வலியை தந்துவிட்டு கட்டாந்தரையில் உருள விட்டாய்
கட்டியனைக்கும் ஆசை தந்து
கனவில் கூட புலம்பவிட்டாய்
என்று தீரும் என் சாபம்
உன் முத்தம் தீர்க்கும் என் கோவம்
யோசி பெண்ணே நான் பாவàம்
கருணை காட்டு காதல் வாழும்

எழுதியவர் : ருத்ரன் (29-Nov-22, 10:54 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal vaazhum
பார்வை : 171

மேலே