புன்னகை சிந்தும் முத்து - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
புன்னகை சிந்தும் முத்தும்
..பூவிதழ் சிந்தும் தேனும்
இன்முகங் காட்டும் ஈர்ப்பும்
,,எழிலுற வமைந்த தோளும்
நன்மொழி கொண்ட பேச்சும்
..நயம்படச் சொல்லுஞ் சொல்லும்
தென்றலென் றவற்றைச் சொல்வேன்
..தேன்மொழி யாளே கேளாய்!
- வ.க.கன்னியப்பன்
முதலடி உதவி: திரு.கவின் சாரலன் அவர்கள்