கூந்தலின் வாசம்

அறுசீர் விருத்தம்


1....

தமிழில் அமைந்தப் பாட்டென்று
........சற்றும் ஆயா வப்பாட்டை

தமிழ்நம் மொழிதா னேயென்று
....பலரும் எழுதிக் குவிக்கின்றார்

தமியா மெமது மொழியுங்கேள்
.....தமிழின் பாட்டில் தவறென்றால்

துமித்தார் காதை பொய்யில்லை
......உண்மை இஃது உணர்வாயே

தமியாம். = தனியாம்

2......
தருமிக் குதவத் தமிழ்யீசன்
......மதுரைப் புலவர் சங்கத்தில்



பெருமை யுடனே தர்கம்செய்
....திட்டார் நக்கீ ரனுடன்காண்

பொருளில் குற்றம் என்றேதான்
.....வாதம் புரிந்தா னேநக்கீரன்

அருமை பொருளில் சொற்குற்றம்
.....பகுத்தார் தமிழின் முன்னோரே


3.....


கம்ப ருடனொட் டக்கூத்தன்
......பாடல் அமைப்பில் தர்கங்கள்

வம்பாய் மன்னர் முன்னேதாம்
.....நடாத்தி யசம்ப வங்கள்பார்

சம்ப வமொன்றை சொல்வேன்கேள்
......நாலு மதிதான் ஒர்பாட்டில்

அமைக்க ஒளவை ஒட்டக்கூத்
......தனையும் புகழேந் தியைக்கேட்க

4.....

ஒட்டன் மூன்று மதிமட்டும்
.....போட புகழேந் தியுமிட்டார்

குட்டிக் குறைச்சந் திரனென்றே
......மூன்று மதிக ளுடன்நாலே

விட்டக் குறையி ருப்பின்தான்
.....திருந்தத் தமிழை கவிசெய்வார்

திட்ட மிட்டு கற்றாலே
........திரும்பும் இலக்க ணம்சொல்லே


....

எழுதியவர் : பழனி ராஜன் (29-Nov-22, 8:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே