உன்னை மறக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா.//
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சங்குவெண்மைத் தீயிலிட்டால் மறைந்து போகுமா /
எங்கிருந்த போதும் உன்னைமறக்க முடியுமா /
காசுபணம் கவுரவங்கள் பிரிக்கக் கூடுமோ /
பேசுபொருள் நீயுமானாய் தடுக்க ஏலுமோ/
பொறக்குமுன்னே கருவிலேயே எழுதிவச்சானே கடவுள் /
பறவையாக நெஞ்சங்களைப் பறக்க விட்டானே /
சமுத்திரத்தில் கலந்துவிட்ட ஆத்துத் தண்ணியா /
அமுதவல்லி உள்ளத்திலே கலந்து விட்டேனே /
காலதூரம் அதிகாரம் அன்பை மறுக்குமா /
கோலமயில் இல்லாத சோலை சிறக்குமா //
-யாதுமறியான்.