வாட்டி வதைக்கும் காதல் உள்ளம் 555

***வட்டி வதைக்கும் காதல் உள்ளம் 555 ***


என்னுயிரே...


உன்னை
பார்க்கும் போதெல்லாம்...

இமைக்காமல்தான்
நான் பார்க்கிறேன்...

நீ என்னை
பார்காத
வள்போல...

புருவம் உயர்த்தி கண்களை சுருக்கி
என்னை பார்த்துக்கொண்டு...

உன் மனதுக்குள்
சிரிப்பது
னோ...

உன்
வீட்டு கண்ணாடியில்...

ஆயிரம் முறை உன் முகம்
பார்த்து ரசிக்கும் நீ...

ஒருமுறை நேருக்கு நேர்
என் விழிகளைபார்...

பாதரசம் இல்லாத
கண்ணாடிதான் என் கண்கள்...

உன்னை பலமடங்
கு
அழகாக ஆகட்டும்...

என் உள்ளத்தில் பதிந்திருக்கும்
உன் உருவத்தையும்...

என்
விழிகள் உனக்கு காட்டும்...

உன் மடியில் நான் தலைசாய்க்க
ஒரு நிமிடம் வேண்டும்...

என் வாழ்வி
ன் இறுதி நிமிடமாக
இருந்தாலும் சந்தோசம்தான்...

நான் தலை சாய்த்திருப்பது
உன் மடி என்பதால்...

காதல் எப்படியெல்லாம்
வாட்டி வதைக்கும்...

உன்மீது காதல் மலர்ந்த
போதுதான் நானும் உணர்கிறேன்...

நீயும் உணர்ந்தாள் நாளை
பேருந்து நிலையத்தில்...

புருவம்
உயர்த்தாமல்
என்னை பார் என்னுயிரே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (29-Nov-22, 5:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 274

மேலே