வா

கெஞ்சும் விழி கொஞ்சும் படி
துள்ளும் இள நெஞ்சும்
தஞ்சம் என மஞ்சம் வந்து
பஞ்சம் தீர கொஞ்சம்
அஞ்சும் விழியிரண்டும்
சொல்லும் கவிகள் இங்கே
நெஞ்சில் ஊஞ்சல் ஆடி
மலைச் சாரலாய் குளிர்ந்து
தேனருவியாய் கொட்டியதே...!

சொட்டும் உன்னிதழ் ஊறும்
தேனை சுவைத்ததால்
சுட்டும் விழி சிவந்தே
நான் மயங்கினேனே!
பட்டும் படாமல் நீ
மெல்ல படர்கையில்
கட்டும் குலையாது
நான் வாரி அணைத்தேனே...
கொட்டும் வியர்வை
மழையில் நாம் நனைந்தே
தட்டும் சொர்க்க வாசல்
திறந்தே களிப்போமே வா...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-Nov-22, 9:23 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vaa
பார்வை : 100

மேலே