என்னிலா இவள் வெண்ணிலா

பூரண நிலவுக்கும் தன் அழகைப்
பார்த்து மகிழ்ந்திட எண்ணம் தோன்ற
நீல வானில் உய்யாரமாய் மிதந்து வந்து
பளிங்கு தடாகத்தின் மேலே வந்து
கொஞ்சம் நேரம் நின்று தன்னழகைப்
பார்த்து நிற்கையில் அப்பளிங்கு நீரில்
மற்றோர் நிலவைப் பார்த்து அதிர்ந்தது
இது என்ன மூக்கும் முழியுமாய் இன்னிலா?
என்று அங்கலாய்த்து அங்கிருந்து கொஞ்சம்
வெட்கி மெல்ல நழுவித் போனதாம்
நிலவுக்கு தெரியாது அன்னிலா வேறுயாரும்
இல்லை என்நிலாவே அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-22, 1:41 pm)
பார்வை : 156

மேலே