நீ கொடுத்த முதல் பரிசு இதழ்களில் 555

***நீ கொடுத்த முதல் பரிசு இதழ்களில் 555 ***


ப்ரியமானவளே...


உள்ளங்களை நாம்
பரிமாறிக்கொண்டு...

உணர்வுகளை முதல்முறை
பரிமாறிக்கொண்டோம்...

நான் கொடுத்த
முதல் பரிசு கன்னத்தில்...

நீ கொடுத்த முதல்
பரிசு இதழ்
ளில்...

முத்தத்தில்
வேறுபாடுண்டோ என்கிறாய்...

உண்ணும்
உணவில் வேறுபாடு உண்டு...

சைவம் அசைவமெ

வேறுபாடு இருக்கலாம்...

இரண்டுமே
நம் பசியாற்றும்...

கன்னத்தில்
கொடுத்தால் சைவ முத்தம்...

இதழ்களில்
கொடுத்தால் அசைவ முத்தமா...

இரண்டும் அன்பின்
வெளிப்பாடுதானே அன்பே...

உன் இதழ் ரேகைகளோடு
என் இதழ்ரேகை சேர்ந்துவிட்டது...

உன் பெயர் அருகே என் பெயர் சேர்ந்தே
வரவேண்டும் காலமெல்லாம்...

வினாக்களும் சந்தோஷமும்
சேர்ந்திரு
க்கும் உன் விழிகளை...

இன்று நான்
நேருக்கு நேர் காணுவதை போல...

நாளை என்
மரண
தருவாயிலும்...

உன் மடியில் தலைசாய்த்தபடி
நான் காணவேண்டுமடி கண்ணே...

உன் கண்களை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (1-Dec-22, 5:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 345

மேலே