யென் கண்மணி

துருவாத தேங்காயடி
கசக்காத ஆடையடி
நுகராத பூக்களடி
நீ கனைக்காதே கண்மணி /

அறுக்காத நாத்தடி
முறுக்காத கயிறடி
உருக்காத வெண்ணையடி
நீ முறைக்காதே பொன்மணி /

தடவாத வீணையடி
ஏறாத ஏணியடி
கிள்ளாத கீரையடி
நீ தள்ளாதே சின்னமணி/

கறுக்காத நட்சத்திரமடி
சுருங்காத சூரியனடி
பறக்காத விழிகளடி
நீ என்னை வெறுத்திடாதே பூமணி/

தீண்டாத கனியடி
திகட்டாத தேனடி
வற்றாத அருவியடி
நீ கிட்ட வந்திடு யென் மாமணி/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 5:44 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 67

மேலே