துள்ளி வரும் இள மானே

மெழுகுச் சிலையா
கொலு பொம்மையா /
துள்ளி வரும்
இளமானோ கொல்லுதையா/

கள்ளியின் கன்னம்
மல்லிப்பூ வண்ணம் /
பள்ளியறையிலே
கொடுத்திடுவேன்
முத்தச் சின்னம்/

வாம்மா வள்ளியென
கூதலுடலும்
அழைக்கின்றதே/
அல்லித்தண்டு கால்களைக்
கொஞ்சிடும் கொலுசும்/

கண்ணைக் கிள்ளி
நெஞ்சை நொள்ளி/
நகர்கிறது காதிலே
காதலைச் சொல்லி/

வில்விழிகளால் தெறிக்க
விட்டேன் அம்புகளை/
பிடித்துக் கொண்டன
புள்ளிமான் ஒன்றை/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 5:51 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 56

மேலே