ராமசாமி கிருஷ்ணசாமி

ராமசாமி: காலம் ரொம்பக் கெட்டுப் போய் விட்டது.
கிருஷ்ணசாமி: ஏன் அப்படி சொல்றே?
ராமசாமி: பின்னே என்னப்பா, என் அக்கா பிள்ளைக்கும் இன்னொரு பெண்ணுக்கும் போன மாதம்தான் நிச்சயதார்த்தம் நடந்தது . இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம். இப்போ என்னடான்னா இரண்டு
பேரும் விவாகரத்து பண்ணிகிட்டாங்க .
கிருஷ்ணசாமி: ???
&&&&
ராமசாமி: ஏம்பா, உனக்கு இப்போது அறுபது வயசாகப்போகிறது. இப்போ போய் கல்யாணம் பண்ணிக்கணும் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஏன் அடம் பிடிக்கிறே?
கிருஷ்ணசாமி: நான் சொல்றது என் அறுபதாம் கல்யாணம் பற்றித்தான்.
ராமசாமி: ???
&&&
ராமசாமி: இதா கேட்டியா செய்தி, ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டு போனதுக்கு ஒருத்தனுக்கு அஞ்சு வருஷம் சிறை தண்டனையாம்.
கிருஷ்ணசாமி: இது ரொம்ப அநியாயம் ராமசாமி
ராமசாமி: இன்னும் கேளு, அவன் தள்ளிண்டு போனது வேறு ஒருத்தர் வண்டியாம்.
கிருஷ்ணசாமி: சரி இந்த ஆளுக்கு புத்தி இல்லையா? ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு போகாமல் ஏன் தள்ளிண்டு போனான்?
ராமசாமி: இதே கேள்வியத்தான் பத்திரிகை நிருபர் கேட்டாராம். அதுக்கு ஸ்கூட்டர் திருடன் சொன்னானாம் " இந்த வண்டியை வச்சிருக்கிறவன் சரியான கஞ்சப் பேர்வழி. டப்பா வண்டிதான், பரவாயில்லை சமாளிச்சிக்கலாம் என்று கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு போய், வண்டியை நிறுத்தி ஸ்டார்ட் பண்ணிப்பார்த்தால் வண்டியில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லை. அந்த நேரம் பார்த்து என் பாக்கெட்டுல காலை டிபன் சாப்பிடச் சரியாக நாற்பது ரூபாதான் இருந்தது. பின்ன ஸ்கூட்டரை தள்ளிண்டு போகாம வேற என்ன பண்ண முடியும்? அதுக்குள்ள போலீஸ்காரங்க வந்து மடக்கிட்டாங்க. அப்புறம் என்ன, டிபனுக்கு பதில் இப்போ டீயும் பன்னும்தான் கிடைத்தது.
&&&
ராமசாமி: ஏம்பா, நேத்து ஒரு ஸாப்ட்வேர் கம்பெனி இன்டர்வியூக்கு போனியே, என்ன ஆச்சு?
கிருஷ்ணசாமி: அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறாய், இன்டர்வியூல " மொஹெஞ்சதாரோ, ஹரப்பா, சிந்து சமவெளி நாகரிகம் இவற்றைப் பற்றி மூன்று பக்கங்களில் ஒரு கட்டுரை வரைன்னு சொல்லி மூணு பேப்பரையும் பென்சிலையும் கொடுத்தாங்க. நான் கட்டுரை எழுதலாமா வேண்டாமா என்று பத்து வினாடிகள் யோசிப்பதற்குள், ஒருவர் "இந்தாங்க ரப்பரும் வச்சிக்கோங்க, அடித்து எழுதாம, திருத்தம் பண்ணுவதற்கு" என்று என்கிட்டே கொடுக்கும்போதுதான் எனக்கு வந்தது கோபம். அப்போ எனக்கு வந்த கடுப்பில் உடனே புறப்பட்டு வெளியே வந்து விட்டேன்.
ராமசாமி: ???
&&&&
கிருஷ்ணசாமி: இது என்னப்பா புதிரா இருக்கு. உன் பேங்க் பாலன்ஸைக் கேட்டா, பத்தாயிரம் ரூபாய் கூட இல்லைன்னு சொல்ற. அப்புறம் ஏன் " அமெரிக்கா போகணும், ஆஸ்திரேலியா போகணும், அன்டார்டிகா போகணும்னு" அடம் பிடிக்கிறே?
ராமசாமி: என்கிட்ட பணம் இல்லை என்னும் போது, இந்த நாடுகள் எல்லாம் ஏன் இருக்கணும்? அதனால் தான் 'இந்த நாடுகள் எல்லாம் இருக்கக் கூடாது. போகணும்னு சொல்றேன்.
கிருஷ்ணசாமி:???
&&&
ராமசாமி: தலை தீபாவளிக்கு உன் மாப்பிள்ளைக்கு என்ன வாங்கி கொடுத்தே?
கிருஷ்ணசாமி: கைத்துப்பாக்கி
ராமசாமி: ஐயோ, அவர் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவராச்சே? துப்பாக்கின்னா ஓடிப்போய் விடுவாரே?
கிருஷ்ணசாமி: அதுக்கு நான் என்ன பண்ண முடியும். பட்டாசு வாங்கப்போன கடையில் "பத்து ரோல்கேப் பாக்கெட்டுகள் வாங்கினா, அதைப் போட்டு சுடுவதற்கு ஒரு துப்பாக்கி இலவசம்" என்று சொன்னதால் கைதுப்பாக்கியையும் வாங்கிவிட்டேன். இந்த விலைவாசி காலத்துல அவருக்கு மோதிரம் போடவோ, கைக்கடியாரம் வாங்கித் தரவும் காசுக்கு எங்கேப்பா போகிறது.
ராமசாமி: அது போகட்டும். தீபாவளி அன்று மாப்பிள்ளை ரோல்கேப் வெடித்தாரா?
கிருஷ்ணசாமி: அவர் இனிப்பும் காரமும் சாப்பிட்டுக்கொண்டே, எங்கே தான் சுட்டால் தனது கை சுட்டுவிடுமோ என்று பயந்து ரோல்கேப்பை துப்பாக்கியில் போட்டு என் பொண்ணுக்கு கொடுத்து சுடச்சொல்லிவிட்டார்.
&&&
ராமசாமி: உன் பாட்டிக்கு நூறு வயசு. இன்னும் நல்லா சாப்பிட்டு விட்டு, குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்காங்க. உன் தாத்தா என்னடான்னா முப்பது வயசிலேயே டிக்கெட் வாங்கிட்டாரே, ரொம்ப அநியாயம்?
கிருஷ்ணசாமி: அதுக்கு பாட்டியும் நானும் என்ன பண்ண முடியும்?
ராமசாமி:???
&&&

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Dec-22, 5:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே