யானை நுழைய பாத்திரக்கடையில் இடம் இல்லை

பாத்திரம் வாங்க வந்தவர்: சார் இங்கே பாத்திரம் வாங்கினால், அதைத் கழுவி சுத்தம் செய்வதற்கு ஆள் கிடைக்குமா?
பாத்திரக் கடைக்காரர்: ???
&&&
கடைக்காரர்: உங்களுக்கு எந்த மாதிரி பாத்திரம் வேண்டும்?
வாங்க வந்தவர்: அட்சயபாத்திரம்
கடைக்காரர்: ???
&&&
வாங்க வந்தவர்: சார் டபராவும் டம்பளரும் வாங்கினால் சூடான பில்டர் காபி இலவசம்னு போட்டிருக்கீங்களே, நான் பத்து டபராவும் டம்பளரும் வாங்கினால், இங்கே நான் ஒரு காபி குடித்துவிட்டு, மீதி ஒன்பது காப்பியை சூடாக இலவச பிளாஸ்கில் போட்டு இலவசமாக கொடுப்பீர்களா?
கடைக்காரர்: ???
&&&
கடைக்காரர்: ஒரு பெரிய பாத்திரம் வாங்கினால் ஒரு கிலோ வெல்லம் இலவசம்.
வாங்க வந்தவர்: ஒரு சின்ன பாத்திரம் வாங்கினா அரை கிலோ வெல்லம் கிடைக்குமா?
கடைக்காரர்: இல்லை. போட்டு வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பு இலவசமாய் கிடைக்கும்
வாங்க வந்தவர்: ???
&&&
கடையில் விளம்பரம்: இங்கே ஒரு கரண்டி வாங்கினால் இன்னொரு தலைக்கரண்டி இலவசம். தலைக்கரண்டி, நெருக்கடி நேரங்களில் உங்கள் கணவரின் தலையில் அதிக வலி தெரியாமல் லேசாக தட்டிவிட உதவியாக இருக்கும்.
&&&

இன்னொரு விளம்பரம்: மாமியார்-மருமகள் சண்டைக்குத் தேவையான பாத்திரங்களும் கரண்டிகளும், பத்து சைசுகளில், சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.
பின்குறிப்பு: நசுங்கிப்போன பாத்திரங்களும் கரண்டிகளும் அடுத்த மூன்று வருடங்களுக்கு இலவசமாக முடிந்தவரை ரிப்பேர் செய்துகொடுக்கப்படும்.
&&&

பாத்திரம் வாங்க வந்த இருவரின் சம்பாஷணை:

ஒருவர்: என்னப்பா இப்படிப்பட்ட ஒரு விபரீதமான கியூ?
இன்னொருவர்: இன்று பம்பர் பாத்திர விற்பனையாம்
ஒருவர்: அப்படி என்ன பம்பர் விற்பனை?
இன்னொருவர்: 10000 ரூபாய்க்கு பாத்திரப் பொருட்கள் வாங்கினால் ஐந்து கிலோ சின்ன வெங்காயம் இலவசம். 20000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் பத்து கிலோ சிகப்புத் தக்காளி இலவசம்.
ஒருவர்: அதுக்குப்போய் இவ்வளவு பைத்தியக்காரத்தனமான, அனுமார் வால் போல வரிசையா?
இன்னொருவர்: வரிசை அதுக்கு இல்லையப்பா. 30000 பெருமான பொருட்களை வாங்கினால் ஒருவாரம் பிரீபாடி மஸ்ஸாஜம். ஆமாம் நீங்க இப்போ என்ன வாங்கப்போறீங்க?
ஒருவர்: ஹிஹிஹி..ஹிஹிஹி...ஹிஹிஹி. எனக்கு எதுக்குங்க வெங்காயமும் தக்காளியும். எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. நீங்க என்ன வாங்கப்போறீங்க?
இன்னொருவர்: ஹிஹிஹி..ஹிஹிஹி...ஹிஹிஹி. எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. சம்சாரம் ஒரு மாசம் ஊருக்குப் போயிருக்காங்க. உடம்பு கொஞ்சம் அங்கே இங்கே வலிக்குது. அதான் சும்மா கொஞ்சம்காட்டலாம்னு. ஆமாம், என் குடும்பத்திற்குப் பாத்திரங்கள் தேவை என்பதால் வாங்குகிறேன். நீங்க பிரமச்சாரி.உங்களுக்கு எதுக்கு 30000 ரூபாய் பாத்திரங்கள்?
ஒருவர்: ஹிஹிஹி..ஹிஹிஹி...ஹிஹிஹி. என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பெண்மணி இருக்கிறார்கள். அவங்களுக்கு நான் பாத்திரமெல்லாம் வாங்கிக்கொடுத்தா எனக்கு நூறு நாளைக்கு இரண்டு வேளையும் இலவசமாக உணவு கொடுத்து நன்றாக கவனிப்பாங்க. ஹிஹிஹி..ஹிஹிஹி...ஹிஹிஹி
இன்னொருவர்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Dec-22, 2:34 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 80

மேலே