விலகல்
குளிரும் தேகம்
சூடு தேடும்.
மெதுவாய் வீசும் தீ அலை
மேனி வருடும்.
மெய்மறந்து இடறும் போது
உறவாய் இருந்த தீ
நோவாய் மாறும்.
யார் இங்கே குற்றவாளி?
தீயா? இல்லை
தூரம் இருக்க வேண்டிய தீ
அருகில் வைத்ததா?
மீறுவது தீயாய் இருந்தால்
விலகுவது நீயாய் இரு.
தவறினால் வருடல்
நெருடலாய் நிற்க்கும்.