178 இயலு கருமுறையால் யாவரும் உடன்பிறப்பே - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 5

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

மக்கள்யா வருமோ ரன்னை
..வயிற்றிடை யுதித்த தாலிச்
சக்கரந் தனிலெல் லாருஞ்
..சகோதர ராவர் சீரின்
மிக்கவர் தாழ்ந்தோ ரென்னல்
..வெறும்பொய்யா மேன்மை யென்ப(து)
ஒக்கவே பிறப்பி றப்பி
..லுறுங்கொலோ வுரையாய் நெஞ்சே. 5

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

’மக்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றில் தோன்று தலால் இந்த பிறப்பு முறைச் சக்கரத்தில் எல்லாரும் உடன் பிறந்த சகோதரரே ஆவர். பிறப்பால் உயர்ந் தோர் தாழ்ந்தோர் என்று கூறிக் கொள்வது வெறும் பொய்யாகும்.

மேன்மை என்பது தாம் செய்யும் நல்லொழுக்கங் களால் இல்லாமல் பிறப்பு இறப்பால் உண்டாகுமா என்று சொல் நெஞ்சே!’ என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

சக்கரம் - பிறப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 7:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே