குழந்தைகளே

"பள்ளிக்கு சென்றிடுங்கள்
ஏனெனில் பள்ளி
அறிவினை மலரச் செய்யும்.

"பாடங்கள் படித்திடுங்கள்
ஏனெனில் பாடம்
வாழ்வினில் உயர செய்யும்.


1. கல்வி கண் திறந்தால்
நல்வழி பிறக்கும்,
பயணமும் சுகமாகும்,
ஆகையினாலே
கவனமாய் படித்திடுங்கள்.

(பள்ளிக்கு சென்றிடுங்கள்)

2. செல்வத்துள் எல்லாம்
சிறந்தது எதுவோ
கல்வி செல்வம்தானே,
ஆகையினாலே ஆர்வமாய்
படித்திடுங்கள்.

(பள்ளிக்கு சென்றிடுங்கள்)

எழுதியவர் : (11-Dec-22, 10:56 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kulanthaikale
பார்வை : 854

மேலே