181 எல்லோர்க்கும் ஈயஇறை செல்வம் அருளினன் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 8

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

உடலுறுப் புகள்மேல் கீழென்(று)
..உன்னிடா தோம்பல் போலுந்
தடமலை கொண்ட நீரைத்
..தாழ்தரைக்(கு) அளித்தல் போலுந்
தொடர்புறு மேலோர் தங்கைத்
..தோய்நிதி யாவுந் தாழ்ந்தோர்க்
கிடவெனக் கடவுள் ஈந்த
..தெனநினைந் திடுவர் மாதோ. 8

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உடலில் காணப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி கை, கால் முதலிய உறுப்புகளை இது மேலே, இது கீழே என்று எண்ணிடாது அனைத்து உறுப்புகளையும் ஒன்றே போல பாதுகாப்பது போலவும், பெரியமலை தன்பாற் கொண்ட மழை நீரைத் தாழ்ந்த தரைக்கு கொடுப்பதும் போலவும்,

நற்குணமுடைய உயர்ந்தோர் தமக்கு அருளிய செல்வம் யாவையும் தாழ்ந்தோர்க்குத் தந்து உதவுவதற்காகக் கடவுள் தந்தது என்று எண்ணி எல்லோர்க்கும் வழங்குவர், தெரியுமா” என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-22, 10:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே