வான்மீகியும் கம்பனும்
கரையறியாக் காட்டாற்று வெள்ளம் போலக்
.....,கவிபொழிந்து வான்மீகி உலகுக் கீந்த
திரையறியா ஓட்டத்தைத் தேக்கிக் கட்டி
.......திறமிகுந்த கால்வாய்கள் செய்து பாய்ச்சித்
தரையறியா இலக்கியக்கா வனத்தைத் தந்தான்
........தனிப்புலமைக் கம்பனெனும் கவிதைத் தச்சன்;
உரையறியாப் பயனளிக்க உதவும் பாட்டை
.......உலகமெலாம் அனுபவிக்க உழைப்போம்
எண்சீர் விருத்தம் சரியாக எழுதக் கற்றுக்கொள்ள உதவும்படி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ளதை படித்து
தவரில்லாது எழுதுங்கள்
கரையிலா பாய்ந்திடும் வேகமான காட்டாற்று வெள்ளம் எந்தவழியில் கடலுள் புகுமென்று கணிக்க முடியாத கதியில் இராம காதைகளை வான்மீகி நமக்குக் கொடுத்தான்
அந்த காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்து மடக்கி அணையிட்டு கால்வாயில் முறைப்படுத்தி தரைஎப்போதும்
அறிந்திரா பூஞ்சோலைகளுக்கு பாய்ச்சி அழகான வாசமலர்களை,
சிறந்தக் கவித்தச்சனான கம்பன தமிழ் பாட்டாக்கி உலக மக்களுக்கு
ருசித்து இன்புறும் வகையில் செதுக்கி கொடுத்தான் என்பதாகும்