கம்பனின் சிறப்பு அறிவு

கம்பனின் அறிவு


எண்சீர் விருத்தம்

மால்கடிந்த தவமுனிவான் மீகி என்பான்
......வனத்திடையே தான்கண்டு கொண்டு வந்த

பால்படிந்து, முள்ளடர்ந்து, பருத்து நீண்டு
.........பரிமளிக்கும் பலவின்கனி பாருக் கீந்தான்;

மேல்படிந்த பிசினகற்றி, மெள்ளக் கீறி,
.........மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து,

நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
..........கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தன்

மாலையேக் கடிந்த தவம்முனிவன் வான்மீகி முட்கள் நிறைநக்
காட்டில்தான் கண்ட முட்களைத் தோலில் பெற்றிருக்கும்
நீண்டதுமான பால்படிந்த முழுப் பலாப்பழத்தை அப்படியே கொண்டுவந்து உலகோரிடம் கொடுத்து விட்டான்

ஆனால் தமிழ்த்தாய் நோன்பு நோ ற்று அதன் பிறகு பெற்ற பிள்ளையான கம்பன் என்பார் அந்தப் பலா பழத்தின் பிசினை அகற்றித் தோலைக் கீறி உள்ளிருக்கும் சுளையாம் கனிகளை
அழுக்கான ஒட்டடை படிந்த (அ) நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களுக்கு விருந்தில் பரிமாறி சுவைத்துண்ணக் கொடுத்தான்
என்பதாம்

எழுதியவர் : பழனி ராஜன் (13-Dec-22, 7:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே