மங்கை
அடி பெண்ணே!!
வானில் சூழும் கருமேகம் எல்லாம் உந்தன் கூந்தலோ..
தென்றல் வந்து முட்டி மோதும் நதி போல ஒன்றோடு ஒன்று முட்டி விளையாடுகிறது..
கண்ணே!!
உன் இரு விழி பார்வை சந்திர சூரியனோ வந்து வந்து போகும் ஆனால் போகாமலே நிற்கிறது உந்தன் விழிகள் இரண்டும்..
பூவே பொழுதே!!
பிஞ்சு இதழ்கள் பேசும் கொஞ்சித் தமிழன் குழந்தையை மாறுதடி உன்னிடம் நெஞ்சில் கலந்த ஆணை எண்ணில் காண்பாயா இல்லை எனக்குள்ளே அவரை தேடுவாயா..
கன்னியே!!
கண்ணில் என்னை கலப்பாயா? காதலனாக ஏற்பாயா கண் திறந்து பார்க்கும் இடமெல்லாம் காதலியே உன் உருவம்..
உதயமே!!
உதிரம் கொண்டு உன்னில் நான் சேர்வேனோ அல்லது உருவம் இல்லாமல் உன்னுடன் வாழ்வேனோ..
உமையவளே!!
உள்ளம் நிறைந்து உணர்வுகளாய் உன்னிடம் வாழ்வேனோ உறக்கம் மறந்து உனக்காக சாவேனோ..
மலரே!!
என் மருதாணி தேசமே மயங்குகிறேன் உன்னிடம் மரிக்கொழுந்து பாசமே உன் மன்னனாக என்னை ஏற்பாயா என்னை மயக்கும் என் இளம் ரதியே..