வெளியில் வா
உன்
அறையை விட்டு வெளியே வா
உன்
மூடிய கையை விரித்திட்டு வா..
இயற்கை
அழகை கொட்டி வைத்து
காத்துக் கிடக்கிறது.
நிஜத்தை நிஜமாய்
ரசித்திட வா...
உன் கைப்பேசிக்குள்
செயற்கை அழகை
ரசித்து
உன்னை நீயே
ஏமாற்றிக்கொள்ளாதே.
உன் பார்வையை
சுருக்கிக் கொள்ளாதே..
உனக்குத் தெரியாதது ஏதும் இல்லை.
பிரபஞ்சம் மிக பெரிது.
இயற்கை மிக வலிது.
வெளியில் வந்து
மலைகளை ரசி...
மலர்களை ரசி...
கொட்டும் அருவிகளை ரசி...
கடல் அலைகளை ரசி...
சுடும் வெய்யிலை ரசி..
கடும் குளிரையும் ரசி..
வாழ்வே ஒளிமயமாகும்.
கைகளை கட்டி
அறைக்குள் பதுங்கி
அடிமையாகி அமிழ்ந்து விடாதே...
வா...தோழா வா..
வாழ்க்கை வெளியில்
பரந்து விரிந்து கிடக்கிறது.
ரசித்து ருசித்திட வெளியில் வா...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
