நான் ஏன் கவிதை எழுதுகிறேன்
இதுவரை
யாருமே கேட்டதில்லை -
நீயேன் எழுதுகிறாய் என.
இதுவரை
மொட்டவிழ்க்காத முடிச்சுக்களால்
நானாகவும் சொன்னதில்லை.
எண்ணிப் பார்க்கின்றேன்;
எத்தனையோ காரணங்கள்.
எழுதியவை கவிதையென
எண்ணவைப்பது எளிதாக இருக்கிறது. .
ஆடுகளம் எதுவாயினும்
அமர்க்களமாய் இருக்கிறது.
சிக்கனத்திற்குத் தக்கன
சீக்கிரமாய் ஆகிவிடுகிறது.
கை வலிப்பதில்லை;
மண்டைக் காய்வதில்லை.
காரசார விமர்சனங்களிடம்
கடிப்பட்டு காயமடைவதில்லை
கவிதைகளால் தளும்பியே
கடலாகியிருப்பதால்...
கவலைகளுக்குத் தேவைப்படுவதில்லை,
கண்ட கண்ட திரவங்கள்!
இன்னும் அடுக்கலாம் தானெனினும்
அடக்கிக்கொள்கிறேன்...
வினவாத கேள்விக்கு
வியாக்கியானம் போதுமென!