அவனை முழுமையாக நம்பு
உயிரில்லா உடல் போல
நீரில்லா ஆறு
மழையை மறந்த மலைகள்
பயிரைத் தொலைத்த வயல்கள்
வயல்களை விட்டு
வீதிக்கு வந்த விலங்குகள்,
வயிற்று பசி போக்க
வேலை தேடி ஊரை விட்டு
வெளியே போனவர்கள்
ஊரு திரும்பாம இறந்தவர்கள்
அன்று குறைவு தான்
என்றாலும் இப்போது பரிகாரம்
தேடுவது போல் இறைவன்
அகிலமெங்கும்
கொட்டி தீர்த்த மழையால்
கொல்லப்பட்ட உயிர்கள்
கணக்கில் அடங்காது,
பெரு வெள்ளம், மண் சரிவு
பாலங்கள், கட்டிடங்கள்
ஆற்றின் கரைகள்
சாலைகளும் சிதைந்தன,
வீடுகளில் நீர் புகுந்ததால்
வீதிக்கு வந்த மக்கள்
அனைத்தையும் இழந்தார்கள்
படைத்துக் காப்பவன்
பரமன் என்று எண்ணி—அவன்
பார்த்துக் கொள்வான் என
முழுமையாக நம்பியது
துயரைத் தந்தாலும் ,எல்லாமும்
நல்லதுக்கே எனக் கொண்டு
பாரத்தை அவனையே
சுமக்க வைப்போம்
இயற்கையோ , இறைவனோ
இருக்கிறானோ ,இல்லையோ !
உனது மனம்
உண்மையான மகிழ்வைப்
பெற விரும்பினால்
அவனை முழுமையாக நம்பு.