நிராகரிப்பின் வலி

தகுதித் தேர்வுகளில் தழைக்காதக் குருத்துக்கள்
வாழ்க்கையைச் சுருக்கும்போதெல்லாம்
பூதாகரமாய்த் தொங்குகிறது
நிராகரிப்பின் வலி!

கத்தரிக்கப்படும் காதல்கள்
முறிக்கப்படும் நட்புக்கள்
மறுக்கப்படும் வாய்ப்புக்கள்
ஒருபோதும் நிறுத்தப்படக்கூடாது
உடைந்த மனத்தராசில்
உயிருக்கு நிகராக!

நிராகரிப்பின் வலிக்கு
நிவாரணம் எதுவுமில்லை;
’இதைவிட சிறந்த ஒன்று
இல்லாமலா போய்விடும்?’
சொல்லிப் பழகுங்கள்;
சோகம் மலையேறும்.

கருப்பையின் நிராகரிப்பில்
தழைப்பது தானே உயிரினம்?
விதையின் நிராகரிப்பில்
தழைப்பது தானே காடு?
நேற்றைய நிராகரிப்பின் எதிரொலி தானே
இன்றைய இசைப்புயல்?

கைக்குலுக்கும்
நிராகரிப்புகளுடன் செய்யாதீர்கள்
கைக்கலப்பு;
உளியின் செயலுக்கு
உங்களைத் தருவீர்களேயானால்
சிற்பமாய் சிறப்பீர்கள்
நீங்களும் நாளை!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (26-Dec-22, 11:56 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 379

மேலே