எனக்குள் காதல் வசியம் செய்தவளே 555
![](https://eluthu.com/images/loading.gif)
***எனக்குள் காதல் வசியம் செய்தவளே 555 ***
ப்ரியமானவளே...
மார்கழி மாத பணியில் கோபுர
புறாக்கள் மெல்ல விழிக்க...
மரகத
புறாவோ சிறகை விரிக்க...
மார்கழி மாத
உன் மாக்கோலம் பார்க்க...
உன் வாசல்தேடி வந்தேன்
பூசணி பூ கைகளில் கொண்டு...
என்னை கண்டும்
காணாதவள்போல் புள்ளி வைக்கிறாய்...
ரசித்துக்கொண்டே வைத்த
புள்ளிகளை மெல்ல இணைக்கிறாய்...
தினம் தினம் பனியில் நனைந்த
என்மேனி கொதிக்கிறது அனலாய்...
நீ மட்டும்
சுகமாய் என் இதயத்தில்...
பார்க்காமலே
புள்ளிகளை இணைத்தவள்...
உன்னையே
நினைக்கும் என்னை...
உன் மனதில்
இணைக்க மறந்ததென்னடி...
எனக்குள்
காதல் வசியம் செய்தவளே...
என்னை
காக்க வைப்பதில் சுகமா...
அந்தியில் மலரும் முல்லை பூ
மொட்டை நுகர்ந்திட ஆசை...
உன் கரம் கோர்த்து
பூமாலை உனக்கு சூட்டியபின்...
உன் கூந்தலில்
பூ சூடுவதைப்போல...
என்னையும்
சூடிக்கொள்ளடி உயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***