மனித மாண்பு

நானொரு மனிதன்,,,
மனிதமென்ற தத்துவத்தில்
பிரிவினையை உணராதவன்

நீங்கள்
மேட்டில் இருந்தாலும்
நான்
பள்ளத்தில் கிடந்தாலும்
நாம்
நிலத்தில்தான் வாழ்கிறோம்

நீங்கள்
வானத்தில் பறந்தாலும்
நான்
பூமியில் புரண்டாலும்
நாம் இந்த
உலகத்தில்தான் உழல்கிறோம்

நீங்கள்
உருவமாய் திரிந்தாலும்
நான்
ஊனமாய் நகர்ந்தாலும்
நாம்
மனிதர்களாகத்தான்
தோற்றமளிக்கிறோம்

நீங்கள்
நாடறிய விரிந்தாலும்
நான்
நண்டுவளையில் சுருண்டாலும்
நாம்
அறிவால்தான் சிறப்படைகிறோம்

உள்ளத்தில் கிடக்கும்
குப்பைகளை எரித்து
அழுக்கை அகற்றுங்கள்
இந்த பிறவியை அர்த்தப்படுத்துவோம்.

---நிலாசூரியன் தச்சூர்

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (26-Dec-22, 7:54 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
Tanglish : manitha maanbu
பார்வை : 989

மேலே