மீண்டும் கொரோனா

"கொரோனா" மாண்டு விட்டதென்று
மார் தட்டாதே மானிடனே என்று
நம் எல்லோர் தலையிலும்
ஓர் கொட்டு வைத்து
BF--7 என்னும் புதிய ரூபத்தில்
மீண்டும் "கொரோனா" வின் எழுச்சி
புத்தாண்டு வருகைக்கு முன்பே வேகமெடுக்க தொடங்கி விட்டது

அச்சம் கொள்ளற்க மனிதா
கடந்த முறை கற்றுக்கொண்ட
பாடத்தை முன்னிறுத்தி
எல்லோரும் தவறாமல்
முக கவசம் அணிந்து
சமூக இடைவெளியுடன்
பாதுகாப்புடன்
தொடர்ந்து செல்வோம்

"கொரோனா" அரக்கனை
நாம் எல்லோரும் இணைந்து
இத்தரணியை விட்டு அழித்து
வெற்றிக் கொடி கட்டுவோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Dec-22, 5:46 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 181

மேலே