மானும் கானல் நீரும்

கானல்நீர் கண்ட மான்

ஹேமாவதி என்பவர் (11-Sep-22, 9:42 am) இல்
எழுதியிருந்த கருத்து எறக்குறை அறுசீrr எழுதும் வகையில அழகாக அமைந்து இருக்கவே அதை சில சொற்களை நீக்கி அப்படியே விருத்தமாக்கியுள்ளேன்



அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

1)
கரைகள் கோடி இருந்தும்
..........கடலோர் நிலத்தை தேடும்

கரைக்கும் உறவு இருந்தும். (கரை =அழை)
.........அடியேன் அடிநின் நோக்கி


கரைய காப்பேன் உனையும். (கரைய =அழவும்)
..........கண்ணின் இமையாய் இருப்பேன்

கரைந்து போவ தேனோ
............. காக்க நானு மிருக்க

(2)
புவியில் உயிரும் பலவாம்
.........உனது யிரது உருவ

தவிக்கும் தவிப்பை நீயும்
.........அறிகி லைநின் னுயிரென்

கவின்கைக் குழவி காணாத்
.........தாயின் நினைவில் அழும்போல்

நவியால் வெட்டி சாய்க்க
..........ஆற்ற உளரோ ஒருவர்




(3)

எனது கனவின் கோட்டை
..... ..இடித்து நொறுக்கி யதேநீ

உனைநான் காயப் படுத்த
..........முடியா வதைநா னேற்றேன்

மானைக் கானல் காட்டி
........அலைய விடலும் நீயே

எனையுன் மாயை சிதைக்க
........விட்டு சிரிப்ப தேனோ

எழுதியவர் : பழனி ராஜன் (29-Dec-22, 4:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே