பள்ளத்தாக் கோகாதல் குழியும் பூஞ்சோலைக் கன்னம்
உள்ளமெனும் சோலை யிலேஊஞ்சல் ஆடுது உன்நினைவு
வெள்ளமெனப் பெருகி ஒட்டுதடி உணர்வு நீரோடை
கள்ளவிழிப் பார்வை காந்தம்போல் என்னை ஈர்க்குதடி
பள்ளத்தாக் கோகாதல் குழியும் பூஞ்சோலைக் கன்னம்
உள்ளமெனும் சோலை யிலேஊஞ்ச லாடுகிறாய்
வெள்ளம் மெனபெருகி ஓடுதடி உண்ணுணர்வு
கள்ளவிழிப் பார்வையும் காந்தம்போல் ஈர்க்குதடி
பள்ளத்தாக் கோகுழிக்கன் னம்
------ஒரு கவிதை இரு வடிவில்
யாப்பு பயில்வோர் அலகிட்டு அடையாளம் காண்க

