உரையாடல் என்னோடு

மௌனம்
கொலைகள் செய்ய
புறப்படும் முன்,

உண்மையே - நீ
பேசி விடு !

பல நாள்
சகித்த
எரிமலைகள்
வெடித்துச்
சிதறப் போகிறது,

கோபமே - உன்
எதிர்ப்பைக்
காட்டி விடு !

பொறுமையே - நீ
இன்னும் கொஞ்சம் உறங்கு
விடியலுக்கு நேரம் இருக்கு !

முயற்சியே
அதற்குள் என்ன ஓய்வு,

நீ அடைய வேண்டியது
மேகத்தை அல்ல
வானத்தின் எல்லையை !

சிரிப்பு - அது
மகிழ்வித்தவனுக்கு
கொடுக்கும் சன்மானம்,
செலவழித்து விடு !

சேமித்து வைத்தும் 
கடனாளி ஆகாதே !

அழுகையே
உனக்கு அணை கட்டி
ஒரு பயனும் இல்லை - நீ
அமுத நீரா என்ன
அழுக்கு நீர் தானே,
பொழிந்து விடு !

- நா முரளிதரன் 

எழுதியவர் : (29-Dec-22, 5:46 pm)
Tanglish : uraiyadal ennodu
பார்வை : 129

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே