என் மன்னவா

என் நாசி சுவாசித்த
உன் மேனியின் வாசத்தை
காற்றிலே தேடுகிறேன்...

உன் நெஞ்சத்து
ஒலியின் தாலாட்டில்
தூங்கிய என் கண்கள்
இன்று உன் நெஞ்சத்து ஒலி
செவியினில் கேட்காததால்
தூக்கமோ தொலைதூரத்தில் தினமும்...

தொலைதூர வாழ்வு
தொலைவது எப்போதோ
பதில் செல்லடா
என் நெஞ்சத்து மன்னவனே?

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (29-Dec-22, 7:07 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 68

மேலே