தமிழா ஆங்கிலமா எது சிறந்தது
சேக் ஷ்பியரா கம்பனா
ஒருசமயம் சென்னை மெரினா கடற்கரையில் தமிழ் தாத்தா உ. வே. சாமிதரும் பாரதியாரும் ஆங்கிலப் பேராசிரியரான ஒரு பாதிரியாரும் நடந்துலா போகிற வேளையில் இலக்கியப் பேச்சில் லயித்து போயிருக்கும் வேளையில் கிருத்துவப் பாதிரியார் சொன்னாராம்.சேக் ஷ்பியர் தன் இலக்கியத்தில் தொட்டுப் பார்க்கும் இருட்டைஎன்று எவ்வளவு அழகாக கூறியுள்ளார். இதுபோல இருட்டைப் பற்றி உலகத்தில் ஒருவரும் தங்கள் இலக்கியத்தில் சொல்லவில்லை என்றாராம். தமிழுக்கு சுமார் 2000. க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து அச்சிட்டு வழங்கிய உ. வே.சாமிநாத ஐயர் கோபத்துடன் கம்பனின் ஒரு இராமாயணப் பாட்டை உடனே எடுத்து சொல்லி பாடி அசத்தினாராம்
அதன் விளக்கம்
விஷத்தின் நிறம் கருமைநீலம் பூமிக்கு மேலே பரந்து
பரவி நின்றால் எப்படி இருக்குமோ அப்படி நிறத்தான் இராமன். மேலும் பிரளயத்தில் கடலின் நீரானது கிளம்பி மேலெழுந்து பூமியினை முழுதுமாக சூழ்ந்தால் எப்படி கருநீல மாகி நிற்குமோ அப்படி இருக்கும் இராமன்
மேலும் காலன் (எமனின்) நிறமானது கருப்பு அந்த கருப்பில்
கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் அஞ்சன மையினை சேர்த்துக் குழைத்து ஆகாயதிற்கும் பூமிக்கும் சேர்த்துப் பூசினால் எப்படி இருக்குமோ அப்படி இராமன் உடலின் நிறம் இருந்தது என்று கம்பன் வர்ணிக்கிறார். இதில் கம்பனின் கருப்பின் வர்ணனை உயர்ந்த்த்தா அல்லது சேக் ஷ்பியர் இருட்டு வர்ணனை உயர்ந்ததா என்று பாதிரியாரை உ. வே.சாமிநாத ஐயர் கேட்க பாதிரியார் வாயடைத்துப் போனானாராம்
உடனிருந்த பாரதியார் கோபத்தில் அவர் பாடிய பாட்டு இதுதான்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞாலம் மீது இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்
பாரினில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்
பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவையும் அறிந்திலர் ஆங்கோர்
பாரதத்து ஆங்கிலம் பயிற்பள்ளி யுள்போகு
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இன்னாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்ன சொல்லி மற்றெங்கண் உணர்த்துவேன்
இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே
கம்பன் இராமனின் கருப்பைக் குறித்துப் பாடியபாட்டைப் பாருங்கள்
ஆலம் உலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின்
மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும் இருளாய் விளைந்ததுவே! ௬௭