2023 - ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டுக்கு தமிழால் வாழ்த்து

ஆயிரத்து ஐந்நூறு ஆண்டிற்கு முன்பு
பேயென தோன்றிய ஆங்கில சாகசன்
மாயமக்கள் கூட்டம் உருவிட்ட மொழி
மாயங்கள் செய்யும் ஆங்கில மொழி

பலவித மொழியின் சொல்லைக் கடனாய்
பலவகை வழியில் பெற்றே ஓங்கி
உலகில் கலவரம் செய்தே நுழைந்த
நிலையிலா மொழியது கூறிய நாளாம்

புத்தாண் டென்னும் ஒன்றை உலகு
மொத்தமாய் கொண்டாடும் இந்நாளை தமிழும்
ஒத்துக் கொண்டே கொண்டாடும் நிகழ்வை
பித்தம் தெளியாது செல்லும் தமிழரும்

மகிழ்ந்து இன்பமாய் முகிழ்ந்து இருக்க
தகிக்கும் கதிராய் உள்ளம் இருப்பினும்
மகிழ்ந்து நானும் ஆங்கில புத்தாண்டை
யுகம்பல வாழும் தமிழால் வாழ்த்துகிறேன்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-22, 10:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 102

மேலே